தி.மு.க, அ.தி.மு.க பெற்று தந்த உரிமையை இழந்துவிட கூடாது – மதிமுக எம்.எல்.ஏ ராஜேந்திரன்
காவிரி விவகாரத்தில் சட்ட போராட்டங்களை நடத்தி குறைந்தபட்ச நீர் உரிமையை தி.மு.க, அ.தி.மு.க அரசுகள் நிலைநாட்டி இருக்கின்றன. அதை மறைக்க முடியாது. அதையும் இழந்துவிடாமல் நீங்கள் பாதுகாக்க வேண்டும். ஒன்றிய அரசின் அனுமதி இல்லாமல் கர்நாடக அரசு அணை கட்ட கூடாது என தீர்மானத்தில் இருக்கிறது.
ஆனால் தமிழ்நாடா, கர்நாடகாவா என்று வரும்போது ஒன்றிய அரசு கர்நாடகா பக்கம்தான் பலமுறை சாய்ந்திருக்கிறது. ஆகவே அதையும் சிந்தித்து தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என சட்டப்பேரவையில் ம.தி.மு.க எம்.எல்.ஏ ராஜேந்திரன் கூறினார்





