மகேந்திரன் தவெகவில் இணைந்தது, கட்சி நடவடிக்கை சரியானது என்பதையே நிரூபிக்கிறது : வீரபாண்டியன் விமர்சனம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினராக இருந்த சி. மகேந்திரன், சில மோசடி பேர்வழிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாகக் கூறி அவர் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுத்ததாக சிபிஐ மாநில நிர்வாகி வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
மேலும், நடவடிக்கைக்கு பின்னர் மகேந்திரன் கட்சியுடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் இருந்து வந்ததாகவும், தனது தவறுகளை திருத்திக் கொள்ள கட்சி வழங்கிய வாய்ப்பைப் பயன்படுத்தாமல் தற்போது தவெகவில் இணைந்திருப்பதன் மூலம், அவர் மீது கட்சி எடுத்த நடவடிக்கை சரியானதே என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் வீரபாண்டியன் கூறியுள்ளார்.





