பெரியகுளம் அரசு மருத்துவமனையில் கோட்டாட்சியர் விசாரணை..!
பெரியகுளம் அரசு மருத்துவமனையில் பெண் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணை நடத்தினார்.
ஆண்டிபட்டி நடுக்கோட்டை கிராமத்தை சேர்ந்த ஜெயப்பிரியா என்ற பெண் பிரசவத்திற்காக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் 23ஆம் தேதி அனுப்பப்பட்டுள்ள நிலையில் அவர் அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது தொடர்ந்து குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட சூழலில் அவருக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது.
மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததற்கு மருத்துவர்கள் மற்றும் சேர்ந்த அலட்சியமே காரணம் என பிரியாவின் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
இதனையடுத்து இது தொடர்பாக பெரியகுளம் கோட்டாட்சியர் முத்துமாதவன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேரில் விசாரணை மேற்கொண்டார். அப்போது ஆண்டிபட்டி துணை காவல் கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் வட்டாட்சியர் ஆகியோர் உடன் இருந்தனர்.





