--- --:--:-- --

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு போட மாட்டேன் – அண்ணாமலை சபதம்

1

ண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ளார். அண்ணா பல்கலைக்கழக வளாகத்தினுள் மாணவி வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்தும், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், சட்ட ஒழுங்கு சீர்கெட்டு இருக்கிறது என்றும் பாஜக, அதிமுக சார்பில் தனித்தனியே இன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

 

இதில் பாஜக நடத்திய ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் ஆளுநரும், தமிழக பாஜகவின் முன்னாள் தலைவருமான தமிழிசை உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தமிழிசை உள்ளிட்ட பாஜகவினரை போலீஸார் கைது செய்தனர்.

 

இந்நிலையில், இன்று கோவை மாவட்டத்தில் தனியார் விடுதியில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை, “நானும் காவல் துறையில் 9 ஆண்டு குப்பை கொட்டி இருக்கின்றேன். திமுக என்ற போர்வை குற்றம் செய்பவர்களுக்கு தேவைப்படுகின்றது. FIR எப்படி சார் லீக் ஆச்சு. போலீஸ் டிபார்ட்மென்டை தவிர அது லீக் ஆக முடியாது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon