--- --:--:-- --
தினேஷ்குமார்

வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது வாக்காளர்களுடன் உற்சாக போஸ் கொடுத்த தினேஷ்குமார்

திருப்பூர்: சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திருப்பூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் என். தினேஷ்குமார், தொகுதி முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இன்று காலை திருப்பூர் கே.எஸ்.ஆர். பள்ளி நடைபயிற்சி மைதானத்தில் பொதுமக்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார். அதிகாலை முதலே சுறுசுறுப்பாக இயங்கும் கே.எஸ்.ஆர். பள்ளி மைதானத்திற்குச் சென்ற வேட்பாளர் தினேஷ்குமார், அங்கு நடைபயிற்சி மேற்கொண்டிருந்த முதியவர்கள், இளைஞர்கள் மற்றும் இல்லத்தரசிகளைச் சந்தித்தார். அப்போது, நடைபயிற்சி மேற்கொண்டிருந்த மக்கள் அவருக்குக் கைகுலுக்கியும், வாழ்த்துகளைத் தெரிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


அரசின் சாதனை திட்டங்கள்…

மக்களிடையே பேசிய தினேஷ்குமார், “திராவிட மாடல்” அரசின் சாதனைகளை பட்டியலிட்டார். பெண்களின் பொருளாதார சுதந்திரத்தை உறுதி செய்த விடியல் பயணம் திட்டம். தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டம். அரசுப் பள்ளி மாணவர்களின் பசி போக்கி, கல்வியை ஊக்குவிக்கும் உன்னத முன்னெடுப்பு. மாணவிகளின் உயர்கல்வியை உறுதி செய்ய மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் உள்ளிட்டவை குறித்து வாக்காளர்களிடம் விவரித்தார்.

 

dineshkumar
நடைபயிற்சி சென்றவர்களிடம் தினேஷ்குமார் வாக்கு சேகரித்தார்.

அதனைத் தொடர்ந்து, சாமுண்டிபுரம் உள்ளிட்ட திருப்பூர் தெற்கு தொகுதியின் பல்வேறு முக்கியப் பகுதிகளுக்குச் சென்ற வேட்பாளர், வீதி வீதியாகச் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்கள் மற்றும் அமைப்புகளைச் சந்தித்து ஆதரவு கோரிய அவருக்கு, பெண்கள் ஆரத்தி எடுத்து நெற்றியில் திலகமிட்டு வரவேற்றனர்.


சிறுபான்மையினர் ஆதரவு மற்றும் கோரிக்கை ஏற்பு

பகல் வேளையில், சிறுபான்மையின சகோதரர்களைச் சந்தித்த தினேஷ்குமார், அவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் கோரிக்கைகளை முழுமையாகக் கேட்டறிந்தார். “திமுக எப்போதும் சிறுபான்மையினரின் பாதுகாப்பு அரணாகத் திகழும்” என்று உறுதியளித்த அவர், திருப்பூர் மாவட்டத்தின் தொழில் வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தத் தேவையான தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துரைத்தார்.

Leave a Reply

Right Menu Icon