--- --:--:-- --

இந்தியாவில் சிலிண்டர் விநியோகம் சீராக 4 ஆண்டுகள் ஆகும்..!

1

ந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் சீராகுவதற்கு நான்கு ஆண்டுகள் ஆகலாம் என்று வெளியான தகவலை மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. இதனால், இந்தியாவில் சமையல் சிலிண்டர் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

 

வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் விநியோகத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுவதுடன், சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கான கால இடைவெளியும் நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில், இந்தியாவில் சமையல் சிலிண்டர் விநியோகம் சீராகுவதற்கு 3 முதல் 4 ஆண்டுகள் வரை ஆகும் என மத்திய அரசு அதிகாரிகள் கூறியதாக தகவல் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

இந்நிலையில், இந்த தகவலை மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. இதுபோன்ற தகவல்கள் நாட்டின் சிலிண்டர் விநியோக நிலை குறித்த தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

அமெரிக்கா, நார்வே, கனடா, அல்ஜீரியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் இருந்து சமையல் எரிவாயு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்துள்ளது.

மார்ச் மாதத்தில் சராசரியாக ஒவ்வொரு நாளும் 50 லட்சம் சிலிண்டர்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், சிலிண்டர் பற்றாக்குறை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon