கோவை கிணத்துக்கடவு த.வெ.க வேட்பாளர் கே.விக்னேஷ் அந்த தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், கோவை உக்கடம், போத்தனூர், சாரமேடு, ஆத்துப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில், பெரும்பான்மையாக வாழும் இஸ்லாமியர்களை 3 வெவ்வேறு தொகுதிகளில் பிரித்து வைத்து, இஸ்லாமியர்களுக்கு அதிகாரம் கிடைக்கவே கூடாது என்பதே தி.மு.க., அ.தி.மு.க.வின். நோக்கம் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.