ஒருவரி செய்திகள்
சிங்கப்பூரில் சதித் திட்டம் முடக்கம்:
இணையவழி தீவிரவாதக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு வன்முறைத் தாக்குதலுக்குச் சதித் திட்டம் தீட்டிய 3 மாணவர்கள் சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோடீஸ்வரர்கள் அதிகரிப்பு:
இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் பெரும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரித்து, தற்போது 576 பேர் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேகதாது அணை விவகாரம்:
மேகதாது அணை கட்ட கர்நாடகாவுக்கு தமிழகத்தின் ஒப்புதல் தேவையில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
காமன்வெல்த் போட்டி:
காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் இந்தியா முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.
துப்பாக்கிச் சுடுதல் போட்டி:
சீனாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் ஈஷா சிங் தங்கம் வென்றார்; மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினர்.
பட்டாசு ஆலை விபத்து:
சிவகாசி அருகே சட்டவிரோதமாக இயங்கிய பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
மனிதக் கழிவுகளை அகற்றும் முறை:
மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கனிம வளங்கள் கொண்டு செல்லத் தடை:
பிற மாநிலங்களுக்கு கனிம வளங்களை கொண்டு செல்வதற்கு 3 மாதங்கள் தற்காலிக தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
தங்கத்தின் விலை உயர்வு:
தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1,06,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மழை வாய்ப்பு
தமிழகத்தில் இன்றும் நாளையும் பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.





