தூய்மை பணியாளர் இல்லம் சென்ற தினேஷ்குமார்.. தெற்கு தொகுதியில் அதிரடி வாக்கு சேகரிப்பு!
தெற்கு தொகுதிக்குட்பட்ட இடங்களில் வாக்கு சேகரித்த தினேஷ்குமார்
திருப்பூர்: திருப்பூர் தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் தினேஷ்குமார், தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சூறாவளிப் பயணம் மேற்கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பனியன் தொழிலாளர்கள் மற்றும் சாமானிய மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்த அவர், “மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதே உதயசூரியன் அரசின் இலக்கு” என முழக்கமிட்டார்.
சனிக்கிழமை இரவு தொடங்கிய பிரச்சாரம், ஞாயிறு அன்று பகல் முழுவதும் திருப்பூரின் பல இடங்களில் தொடர்ந்தது. திருப்பூர் மாநகராட்சியில் நடைபெற்ற “மகிழ்ச்சியான ஞாயிறு” நிகழ்ச்சியில் வேட்பாளர் தினேஷ்குமார் பங்கேற்றார். அப்போது அங்கிருந்த பொதுமக்களுடன் இயல்பாக உரையாடிய அவர், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுடன் கலந்துரையாடி உற்சாகப்படுத்தினார்.
தூய்மை பணியாளர் இல்லத்திற்கு விசிட்
முன்னதாக, மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கான நலத்திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, புஷ்பா என்ற தூய்மை பணியாளர் தனது குடும்பச் சூழல் மற்றும் உடல்நலன் குறித்த கோரிக்கையை முன்வைத்தார். இதனை உடனடியாக கவனத்தில் கொண்ட தினேஷ்குமார், புஷ்பாவின் இல்லத்திற்கே நேரில் சென்று நலம் விசாரித்தார்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தேவையான உதவிகளை வழங்கியதோடு, புஷ்பாவின் மேற்சிகிச்சைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அவரே முன்னின்று செய்து கொடுத்தார். வேட்பாளரின் இந்த உடனடி மனிதாபிமான நடவடிக்கை அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

“பின்னலாடைத் தொழில் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும்” பிரச்சாரத்தின் போது திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை மக்கள் மத்தியில் பட்டியலிட்ட தினேஷ்குமார் பேசும்போது, “திருப்பூரின் வாழ்வாதாரமான பின்னலாடைத் தொழில் தற்போது சந்தித்து வரும் சவால்களைத் தீர்க்க, சட்டசபையில் உங்கள் குரலாக ஓங்கி ஒலிப்பேன்” என்றார்.
திராவிட மாடல் மீது நம்பிக்கை
பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட அவர், “எல்லோருக்கும் எல்லாம்” என்பதே திராவிட மாடல் ஆட்சியின் தாரக மந்திரம் என்றார். சமூக நீதி, பெண்கள் முன்னேற்றம் மற்றும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்தும் இந்த ஆட்சி மீது மக்களுக்கு நாளுக்கு நாள் நம்பிக்கை அதிகரித்து வருவதாகவும், தெற்கு தொகுதி மக்களின் அனைத்துக் குறைகளும் முன்னுரிமை அடிப்படையில் தீர்க்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.





