--- --:--:-- --

அமைச்சர் சாமிநாதனுக்கான காங்கேயத்தில் பிரசாரம் செய்த துணை முதல்வர் உதயநிதி!

சாமிநாதன்

அமைச்சர் சாமிநாதனுக்காக வாக்கு சேகரித்த துணை முதல்வர் உதயநிதி

காங்கேயம்: “இந்தத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் டெல்லிக்கு இடையேயான போர். தமிழ்நாட்டைத் தொடர்ந்து புறக்கணிக்கும் டெல்லி அணியை ஓட ஓட விரட்ட வேண்டும்,” என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆவேசமாக பேசினார்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் தாராபுரம் தொகுதி வேட்பாளர் இந்திராணி ஆகியோரை ஆதரித்து, உதயநிதி ஸ்டாலின் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:

காங்கேயம் தொகுதிக்கு திமுக அரசு பல்வேறு சாதனைகளைச் செய்துள்ளது. குறிப்பாக, வட்டமலைக்கரை அணைக்கு ரூ.15 கோடி மதிப்பீட்டில் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. ரூ.6 கோடி மதிப்பீட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சிவன்மலை சாலை வசதி, காங்கேயம் காளை சிலை எனப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளோம். அந்த உரிமையோடு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்கிறேன்.

 

saminathan
காங்கேயம் தொகுதியில் இரவில் வாக்கு சேகரித்த அமைச்சர் சாமிநாதன்

பெண்களுக்குக் கட்டணமில்லாப் பேருந்து, மாணவர்களுக்கு லேப்டாப் என முதல்வர் பல திட்டங்களைத் தந்துள்ளார். மகளிர் உரிமைத் தொகையைத் தடுக்க அதிமுகவும், பாஜகவும் எவ்வளவோ முயன்றன. அதையும் மீறி அதிகாலையிலேயே வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டது. இனி வரும் காலங்களில் மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 ஆகவும், முதியோர் உதவித்தொகை ரூ.2,000 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும். ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டம் மூலம் ரூ.8,000-த்தை முதல்வர் உங்களிடம் ஒப்படைப்பார்.

எடப்பாடி பழனிசாமி ஒரு புகைப்படத்தைக் காட்டி எனக்கு அனுபவம் இல்லை என்கிறார். ஆம், அவர் காட்டும் அந்த ‘முரட்டு அடிமை’ அனுபவம் எனக்கு நிச்சயம் கிடையாது. அந்தப் புகைப்படம் இப்போது உலகப் புகழாகிவிட்டது. நான் இதைக் கேட்டால் அவர் என்னைச் சாகச் சொல்கிறார்.

தொகுதி மறுவரையறை (Delimitation) மூலம் தமிழகத்தின் எம்பி-க்கள் எண்ணிக்கையை 47-ஆகக் குறைக்க டெல்லி சதி செய்கிறது. தமிழகத்தின் உரிமையைப் பறிக்கப் பார்க்கும் அவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். கலைஞரின் பேரனாக, தலைவரின் மகனாக உங்களிடம் கேட்கிறேன், உதயசூரியனை வெற்றி பெறச் செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Right Menu Icon