தி.மு.க அரசை கண்டித்து, திருமுருகன்பூண்டி பேரூராட்சி கழக அ.தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
திருமுருகன்பூண்டி பேரூராட்சி நகர கழக அ.தி.மு.க சார்பில், தி.மு.க அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர், திருமுருகன்பூண்டி பேரூராட்சி நகர கழக அ.தி.மு.க சார்பில் நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும், ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் மாதம் ரூ.5 ஆயிரம் வழங்கவேண்டும், டீசல் விலையை குறைக்க வேண்டும், மேகதாது அணையை கட்டுவதை தடுக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தி.மு.க அரசை கண்டித்து இன்று திருமுருகன்பூண்டி பேரூராட்சி அலுவலகத்திற்கு எதிரே உள்ள பஸ் நிறுத்தம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு திருமுருகன்பூண்டி பேரூராட்சி அ.தி.மு.க நகர கழக செயலாளர் பழனிசாமி தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் லதா சேகர், மாவட்ட அவைத்தலைவர் கோபால், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் விஸ்வநாதன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் ராசு (எ) பழனிசாமி, அவிநாசி ஒன்றிய மாணவர் அணி செயலாளர் கார்த்திகேயன், பூண்டி நகர அம்மாபேரவை செயலாளர் ராஜேந்திரன், எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் அனந்த ராமகிருஷ்ணன், நகர எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் சபாபதி, இலக்கிய அணி செயலாளர் ரவி, ஐ.டி. விங் செயலாளர் எம்.பூபதி, வக்கீல் அணி செயலாளர் வி.பூபதி, உள்பட பலர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசினார்கள். இதில் அ.தி.மு.க வினர் திரளாக கலந்து கொண்டனர்.





