--- --:--:-- --

ஐ.ஐ.டியில் கொரோனா பாதிப்பு 55 ஆக உயர்வு..!

4

சென்னை ஐஐடியில் படிக்கும் மாணவர்கள், பணியாற்றும் ஊழியர்களுக்கு பரிசோதனை செய்ததில் அங்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது.

 

படிக்கும் மாணவர்கள் சிலருக்கு காய்ச்சல் இருந்ததில்பரிசோதனை முடிவுகள் உறுதியானது. தொடர்ந்து மக்கள் நல்வாழ்வுத் துறையின் கண்காணிப்பு மற்றும் தீவிர நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆய்வு மேற்கொண்டதில் மேலும் 15 பேருக்கு தொற்று உறுதியானது.

 

இதன் மூலம் மாணவர்கள் ஊழியர்கள் என 30 பேர் பாதிக்கப்பட்டனர். நேற்று பரிசோதனை செய்ததில் மேலும் 25 பேருக்கு தொற்று உறுதியானது. இதன் மூலமாகத்தான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது.

 

Right Menu Icon