ரஜினி, தனுஷ் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!
சென்னையில் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் ஆகியோரின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை போயஸ் கார்டன் பகுதியில் அமைந்துள்ள இவர்களது வீடுகளில் வெடிகுண்டு இருப்பதாக சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மின்னஞ்சல் (E-mail) மூலமாக மர்மத் தகவல் வந்துள்ளது.
இந்த மிரட்டலைத் தொடர்ந்து, தேனாம்பேட்டை காவல்துறையினர் மோப்ப நாய் உதவியுடன் ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் ஆகியோரின் வீடுகளில் தீவிரச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வெடிகுண்டு மிரட்டலை விடுத்த நபர் யார் என்பது குறித்தும், அதன் பின்னணி குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபகாலமாக நாடு முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் முக்கியப் பிரபலங்களின் வீடுகளுக்கு இதுபோன்ற வெடிகுண்டு மிரட்டல்கள் வருவது ஒரு வழக்கமான நிகழ்வாகத் தொடர்கிறது. இருப்பினும், பாதுகாப்பு கருதி காவல்துறை சோதனைகள் நடத்தப்படுவதும், முடிவில் அவை பெரும்பாலும் வதந்தியாகவே முடிகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





