பல்லடத்தில் வீசும் ‘செல்வராஜ் அலை’… வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு!
சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரித்த செல்வராஜ்
பல்லடம்: திருப்பூர் மாவட்டத்தின் தொழில் வளர்ச்சி பல்லடம் தொகுதியிலும் எதிரொலிக்க வேண்டும் என்ற முழக்கத்தோடு, திமுக வேட்பாளர் செல்வராஜ் மேற்கொண்டு வரும் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம், தொகுதிக்குள் புதிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய மாவட்ட பல்லடம் கிழக்கு மற்றும் வடக்கு ஒன்றிய திமுக சார்பில், பெத்தாம்பாளையம் பகுதியில் பிரம்மாண்ட வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வேட்பாளர் செல்வராஜ் அப்பகுதிக்குள் நுழைந்தபோது, இதுவரை கண்டிராத வகையில் ஆயிரக்கணக்கான கட்சித் தொண்டர்களும், பொதுமக்களும் திரண்டு வந்து வரவேற்பு அளித்தனர்.
தொண்டர்கள் தங்கள் கைகளில் இருந்த கருப்பு, சிவப்பு வண்ணக் கழகத் துண்டுகளை ஹெலிகாப்டர் விசிறி போல காற்றில் சுழற்றி, வானதிர முழக்கமிட்டது அப்பகுதியையே அதிர வைத்தது. இந்தப் பிரம்மாண்ட வரவேற்பு, ஒரு தேர்தல் பிரச்சாரக் கூட்டம் போலத் தெரியாமல், ஒரு வெற்றி விழாக் கொண்டாட்டம் போலக் காட்சியளித்ததாக உள்ளூர்வாசிகள் வியப்புடன் பேசிக்கொண்டனர்.





