--- --:--:-- --

தரமற்ற ரேஷன் அரிசி விநியோகிக்கப்பட்டதால் திடீர் ஆய்வு..!

5

காஞ்சிபுரம் திருக்காலிமேடு நியாயவிலைக் கடையில் தரமற்ற ரேஷன் அரிசி வழங்கப்படுவதாக மாநகராட்சி துணை மேயர் தெரிவித்தார். திருக்காலிமேடு நியாயவிலைக் கடையில் வழங்கப்பட்டு வரும் அரிசி தரமற்று இருப்பதாக அந்த பகுதி மக்கள் தொடர்ந்து புகார் அளித்துள்ளனர்.

 

இதனால் மாநகராட்சி துணை மேயரும், அந்த பகுதியின் மாமன்ற உறுப்பினருமான குமரகுருநாதர் இன்று அந்தக் கடையில் ஏறி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அரிசியின் நிறம் மங்கியிருந்ததால் மாற்று அரிசி வழங்க பரிந்துரை செய்யுமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். பின்னர் துணை மேயர் பொது மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

 

Right Menu Icon