--- --:--:-- --

சென்னையில் இருந்து இன்று 6132 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

2

ட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சென்னையில் வசிக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிக்கும் வகையில் இன்று 6132 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2 ஆயிரத்து 92 பேருந்துகளுடன் சேர்த்து 6,132 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, வாக்குப்பதிவு நாளான நாளை 1505 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

 

கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரத்தில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும், கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்க பயணிகள் முன்கூட்டியே முன்பதிவு செய்து பயணிக்கலாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

 

 

மேலும், பயணிகளின் வசதிக்காக கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் மற்றும் மாதவரத்திற்கு மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 24 மணி நேரமும் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் மூன்று மடங்காக உயர்ந்துள்ளதால், பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon