சென்னையில் ஆவணங்களின்றி ரூ. 2.96 லட்சம் பறிமுதல்..!
சென்னையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 2.96 லட்சம் ரொக்கப்பணத்தை தேர்தல் பறக்கும்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இது தொடர்பாக சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி வெளியிட்ட அறிக்கையில், 26.03.2026 அன்று வாகன சோதனையின்போது பறக்கும் படை குழுவினரால் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரொக்கப் பணம் வேளச்சேரி சட்டமன்றத் தொகுதியில் ரூ.55,400/- மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினரால் டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதியில் ரூ.51,000/-, துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் ரூ.1,89,900/-, என மொத்தம் ரூ. 2,96,300/- ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




