புதுச்சேரி முதல்வருக்கு கொரொனா பரிசோதனை…!
சட்டமன்ற உறுப்பினர் மற்றும் சட்டசபை காவலர்களுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து முதல் அமைச்சர் நாராயணசாமி , சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர்களுக்கு கொரொனா பரிசோதனை நடத்தப்பட்டது. புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 20ஆம் தேதி முதல் 25-ம் தேதி வரை ஆறு நாட்கள் நடைபெற்றது.
பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் ஜெயபால் மற்றும் சட்டசபை காவலர்களுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் முதலமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு இன்று கொரொனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.







