பப்ஜி உள்ளிட்ட மேலும் 47 சீன செயலிகளுக்கு தடை விதித்துள்ள இந்தியா..!
தடை செய்யப்பட்ட 59 சீன செயலிகளுக்கு குலோன் ஆக செயல்பட்டு வந்த மேலும் 47 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக 59 சீன செயலிகளுக்கு கடந்த ஜூன் மாத இறுதியில் மத்திய அரசு தடை விதித்தது.
தகவல் தொழில் நுட்ப சட்ட பிரிவு 69 ஏ இன் கீழ் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையால் டிக் டாக், க்ஷேர்இட், யூசி பிரௌசர்,கேம்ஸ்கேனர், ஹலோ போன்ற முக்கிய செயலிகள் தடைசெய்யப்பட்டன. இந்த நிலையில் அந்த 59 செயலிகளுக்கும் குலோன் ஆக செயல்பட்டதாக மேலும் 47 சில செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
ஆனால் தடை செய்யப்பட்ட செயலிகளின் பட்டியல் எதுவும் வெளியிடப்படவில்லை. ஆன்லைன் கேமிங் சேனல் செயலியான பப்ஜி உள்ளிட்டவையும் இந்த பட்டியலில் இடம்பெறும் என கூறப்படுகிறது. மேலும் 250 சீன செயலிகளின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் மத்திய அரசு ஆராய்ந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.







