கொரோனாவில் இருந்து மீண்ட காவலர்களை வரவேற்ற எஸ்பி..!
திண்டுக்கல்லில் கொரொனா பாதிப்பில் இருந்து மீண்டு பணிக்குத் திரும்பிய காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உற்சாக வரவேற்பளித்தார். கொரொனா நோய் தொற்றால் பயிற்சி துணை காவல் கண்காணிப்பாளர், ஒரு ஆய்வாளர் மற்றும் ஆறு காவலர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் அவர்கள் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு பணிக்கு திரும்புகின்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கொரொனாவை வென்றவர்களை மலர்தூவி காவல் கண்காணிப்பாளர் பிரியா வரவேற்று வாழ்த்தினார்.







