இன்று பூமியில் விழப்போகும் சீன ராக்கெட்..!
விண்வெளியிலிருந்து கட்டுப்பாட்டை இழந்து திரும்பிப் வந்து கொண்டிருக்கின்ற ராக்கெட் இன்று பூமியில் விழுந்துவிடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. விண்வெளியில் சீனா தனியாக டியாங்ஹாங் என்ற பெயரில் விண்வெளி நிலையத்தை அமைத்து வருகிறது.
இதற்கு மிகப் பெரிய கலத்தைக் கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி லாங் மார்ச் 5 ராக்கெட் மூலம் சீனா செலுத்தியது. இந்த நிலையில் இந்த ராக்கெட் கட்டுப்பாட்டை இழந்த பூமியை நோக்கி திரும்பி வந்த வண்ணம் உள்ளது.
இது குறித்து முதல்முறையாக கருத்து தெரிவித்த சீனா லாங்க்மார்ச் 5பி பூமியின் வளி மண்டலத்திற்குள் நுழையும் போது அதன் பெரும்பாலான பகுதிகள் எரிந்து விடும் என்பதால் பூமிக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளது.




