ஒன்றுபட்ட தமிழ்நாடு காங்கிரஸ் – என்றும் வலிமையானது, உறுதியானது – மாணிக்கம் தாகூர்
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமில், 74 மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்களுடன் மிக நீண்ட, ஆழமான ஆலோசனை மேற்கொண்டார். அத்துடன், மாவட்டத் தலைவர்களுடன் வந்திருந்த அவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் நேரில் சந்தித்து அன்போடு நலம் விசாரித்து, புகைப்படங்கள் எடுத்துக்கொண்ட தருணம் தொண்டர்களின் மனங்களை நெகிழச் செய்தது.
தொடர்ந்து, பாஜக வின் கையாலாகாதத்தனத்தால் நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வின் அநீதியால் தங்கள் அன்புக்குரிய குழந்தைகளை இழந்து வாடும் குடும்பங்களை மக்கள் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். “காங்கிரஸ் இயக்கம் என்றும் உங்களுக்குத் துணையாக நிற்கும்” என்ற அவரது வார்த்தைகள், அக்குடும்பங்களுக்குப் பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது என்று ராகுல்காந்தி வருகை குறித்து மாணிக்கம் தாகூர் பதிவிட்டுள்ளார்.



