--- --:--:-- --

கணவன், மனைவி இருவரும் தாலி கட்டிக் கொண்ட சம்பவம்..!

3

மும்பையில் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் இருவர் மாறி மாறி தாலி கட்டிக் கொண்ட சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாகிறது. மும்பையை சேர்ந்த தனுஜா பாட்டில் சர்தூல் ஆகிய இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர் .

 

இந்த நிலையில் இருவரும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்ட போது சேர்ந்து தனது காதலியிடம் ஆணும் பெண்ணும் சமம் என்பதை குறிக்கும் வகையில் திருமணத்தின்போது மாறிமாறி தாலி கட்டிக்கொள்ள வேண்டும் என முடிவு செய்து கொள்ளலாம் என கூறியுள்ளார்.

 

பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் காதல் ஜோடி தனது முடிவில் உறுதியாக இருந்ததால் தனது திருமணத்தின்போது மாறிமாறி தாலி கட்டிக்கொண்டனர். அவர்களின் இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

Leave a Reply

Right Menu Icon