இடுகாட்டில் புதைக்க இடமில்லாமல் இறந்தவரின் உடலை கொண்டு சாலை மறியல்..!
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே இடுகாடு இல்லாமல் இறந்தவரின் உடலை புதைக்க வழியின்றி உறவினர்கள் தவித்து வருகின்றனர். பாத்திமா என்பவர் உயிரிழந்துவிட்டதால் அவரை அடக்கம் செய்ய அவரது உறவினர்கள் இஸ்லாமிய இடுகாட்டில் இடம் கேட்டனர்.
ஆனால் அங்கு இடம் இல்லை என கூறியதால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தில் உடலை கொண்டு வந்து பஞ்சாயத்து அலுவலகம் முன்பு ஆவடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
உணவகத்திற்கு வந்த வருவாய் துறையினர் ஒரு வாரத்தில் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என கூறியதால் அவர்கள் கலைந்து சென்றனர்.





