யானை மீது அமர்ந்து யோகா செய்த போது தவறி விழுந்த பாபாராம் தேவ்..!
யானை மீது அமர்ந்து யோகா பயிற்சி செய்த போது தவறி விழுந்த பாபா ராம்தேவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் குர்கானில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் யோகா குரு பாபா ராம்தேவ் கலந்து கொண்டார். அங்கு நின்றிருந்த யானை மீது ஏறி அமர்ந்து அவர் தியானம் செய்ய தொடங்கினார்.
திடீரென அந்த யானை அசைந்ததால் நிலை தடுமாறிய அவர் மேடையில் இருந்து தவறி விழுந்தார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு முதுகு தண்டுவடத்தில் காயம் ஏற்பட்டு இருப்பது தெரிய வந்திருக்கும் நிலையில் அதற்காக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.






