ஆன்லைன் டிரேடிங் நிறுவனம் நடத்தி 10 கோடி மோசடி..!
கோயம்புத்தூரில் ஆன்லைன் டிரேடிங் நிறுவனம் நடத்தி ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் 10 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த தங்கம் மற்றும் வைர நகை வியாபாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த ஷெரின் என்பவர் வின் வெல்த் இன்டர்நேஷனல் என்ற பெயரில் கோயம்புத்தூர் சரவணம்பட்டி புரோஷன் ஷாப்பிங் மாலில் ஆன்லைன் டிரேடிங் நிறுவனம் நடத்தி வந்துள்ளான்.
முதலீடு செய்யும் தொகை குறிப்பிட்ட வாரங்களில் இரட்டிப்பு தொகையாக திருப்பித் தரப்படும் என ஷெரின் கூறியதை நம்பி ஏராளமானோர் பணம் கட்டியுள்ளனர்.
இது தொடர்பான புகாரில் தமிழ்நாடு, கேரள எல்லையான வார்ப்புகளில் வைத்து ஷெரினை போலீசார் கைது செய்தனர். இவன் மோசடி செய்த பணத்தில் திருச்சூரில் வீடு, வணிக வளாகம், கார் உள்ளிட்டவை குறித்து போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.






