ஒல்லியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை ஸ்ருதி ஹாசன்..!
உலக நாயகன் கமலின் மூத்த வாரிசு என்ற மிகப்பெரிய புகழ் இருந்தும் , தனக்கான பாதையை தனி ஆளாக அமைத்துக் கொண்டவர்தான் ஸ்ருதி ஹாசன். கதாநாயகி, பின்ணனி பாடகி, இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் சினிமா உலகில் கலக்கிக்கொண்டு இருப்பவர் ஸ்ருதி ஹாசன்.
சிறிது காலம் கழித்து அம்மணிக்கு பட வாய்ப்பு குறைய ரியாலிட்டி ஷோ தொகுப்பாளராக மாறினார். இருந்தும், படவாய்ப்புகள் ஏதுமின்றி வந்த ஸ்ருதிஹாசன் இதற்கிடையில் காதல் வலையில் விழுந்து ஒருவரை பிரேக்கப் செய்தார்.
தற்போது மீண்டும் ராப் பாடகர் சந்தானு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகிறார். இந்நிலையில் தான் 17 வயதாக இருக்கும்போது மாடலிங் செய்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பலரையும் வியப்புக்குள்ளாக்கியுள்ளார்.






