கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் சம்பளத்தை குறைத்துக் கொண்ட நடிகை ராஷ்மிகா..!
கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் திரைப்படத்துறை பாதிக்கப்பட்டிருப்பதை கருத்தில் கொண்டு பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா தனது சம்பளத்தை குறைத்துக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் ஆண்டனி நடிக்கும் படங்களில் சம்பளத்தில் 25 சதவீதம் குறைத்துள்ளார்.
மலையாள நடிகர் மோகன்லால் புதிய படத்திற்கு சம்பளத்தை 50% குறைத்துள்ளார். நடிகை நயன்தாரா மலையாளத்தில் நடிக்கும் படத்திற்கு சம்பளத்தை குறைத்துள்ளார். இந்நிலையில் நடிகை ராஷ்மிகா தெலுங்கில் நடிக்கும் புதிய படத்திற்கு ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் கேட்டதாகவும் அதில் 20 லட்சம் ரூபாயை குறைத்து கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.






