--- --:--:-- --

பிரபல மலையாள திரைப்பட நடிகர் காலமானார்..!

2

பிரபல மலையாள திரைப்பட நடிகரும் சில தமிழ் திரைப் படங்களில் நடித்தவருமான நடிகர் நெடுமுடி வேணு காலமானார். அவருக்கு வயது 73. உடல்நலக்குறைவு காரணமாக திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.

 

500க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களில் முக்கிய கதாபாத்திரமாகவும், சில படங்களில் கதாநாயகனாகவும், காமெடி ரோல்களில் அவர் நடித்துள்ளார்.

 

தமிழில் இந்தியன், இந்தியன் 2, அன்னியன், சர்வம், தாளமயம், சிலம்பாட்டம் உள்ளிட்ட சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் அவர் நடித்துள்ளார். கேரள அரசின் சிறந்த குணச்சித்திர நடிகர், டிவி சீரியல் நடிகர் என பல விருதுகளை பெற்றுள்ளார்.

Right Menu Icon