--- --:--:-- --

துப்பாக்கி கொள்ளையயன் போலீசாரால் சுட்டுக் கொலை..!

1

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே துப்பாக்கியுடன் பதுங்கியிருந்த கொள்ளையர்களில் ஒருவன் போலீசார் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் அருகே ஏரியில் பதுங்கியிருந்த போது காவல்துறையினர் என்கவுண்டர் செய்திருக்கின்றனர்.

 

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே நேற்று வயதான பெண் ஒருவரிடம் இரண்டு வடமாநில கொள்ளையர்கள் 6 சவரன் நகையைப் வழிப்பறி செய்தனர்.அப்போது,பொதுமக்கள் அவர்களை மடக்கி பிடிக்க முயன்றபோது கைத்துப்பாக்கியை காட்டி,பொதுமக்களை சுட்டு விடுவதாக மிரட்டிவிட்டு இருவரும் தப்பித்து சென்றனர்.

 

இதனால்,போலீசாருக்கு தகவல் கூறப்பட்ட நிலையில்,நூற்றுக்கணக்கான போலீசார் உடனடியாக வந்தனர்.சுமார் 100க்கும் மேற்பட்ட போலீசார் பத்து குழுக்களாகப் பிரிந்து நேற்று இரவு முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

 

அதன்பின்னர்,மேலும்,5 ட்ரோன் கேமராக்களைப் பயன்படுத்தி போலீசார் இரண்டு பேரையும் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே ஏரியில் துப்பாக்கியுடன் பதுங்கி இருந்த கொள்ளையர்களில் ஒருவர் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார்.

 

கொள்ளையர்களை போலீசார் பிடிக்க முயன்றபோது,அவர்கள் தப்பிக்க முயன்றுள்ளனர். அப்போது கொள்ளையர்களில் ஒருவர் தனது பாதுகாப்பிற்காக போலீசாரை நோக்கி சுட முயன்றபோது,போலீசார் தங்களை தற்காத்துக்கொள்ள அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

இதனையடுத்து,சுடப்பட்டு இறந்தவரின் உடலை ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து,தப்பியோடிய மற்றொரு நபரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.போலீசார் நடத்திய என்கவுண்டரில் உயிரிழந்த நபர் ஜார்கண்ட்டை சேர்ந்த முர்தஷா என்பது தெரிய வந்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon