--- --:--:-- --

செப்டம்பர் 5 ஆம் நாளுக்குள் அனைத்து பள்ளி ஆசிரியர்களும் கொரொனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்..!

6

சிரியர்களால் கொண்டாடப்படுகிற செப்டம்பர் 5 ஆம் நாளுக்குள் அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் கொரொனா தடுப்பூசி போட்டு முடிக்க ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது.

 

இந்தியாவில் இரண்டாவது அலை பரவல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் பாதிப்புகள் குறைந்த மாநிலங்களில் பள்ளிகளை திறப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இருப்பினும் ஆசிரியர்கள் முழுமையாக தடுப்பூசி போடாத நிலை தொடர்கிறது.

 

இதுகுறித்து ஒன்றிய குடும்ப நலத்துறை அமைச்சர் ட்விட்டரில் இந்த மாதம் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தடுப்பூசிகளை வழங்கும் திட்டத்தில் கூடுதலாக 2 கோடி தடுப்பூசிக்கு அதிகமாக வழங்கப்படும் எனவும் வருகிற செப்டம்பர் 5 ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்படுவதற்கு முன்பாக பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போட கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon