கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை..!
ஆந்திராவில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சித்தூர் மாவட்டத்தில் உள்ளவர் சதீஷ். இவரின் தந்தை சங்கரையா, தாய் குருவம்மாள். இவர்களுடன் தம்பியும் வசித்து வந்துள்ளார்.
விவசாய தொழிலில் இவர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனிடையே சதீஷ் தன் கிராமத்தில் உள்ள ஒருவரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் பணத்தை திருப்பித் தர இயலாத சதீஷ் வீட்டை விட்டு வெளியேறியதாக தெரிகிறது.
இதனால் பணம் கொடுத்தவர் சதீஷ் வீட்டிற்கு சென்று அவரின் பெற்றோரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பெற்றோர் மற்றும் இளைய மகன் என மூன்று பேரும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தனர்.
ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூன்று பேரும் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கடன் கொடுத்தவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






