--- --:--:-- --

குடியரசு தின வன்முறைகள் குறித்த தவறான பதிவு குறித்து பதிவிட்ட சசிதரூரை கைது செய்ய தடை..!

3

டெல்லியில் குடியரசு தின வன்முறைகள் குறித்த தவறான பதிவுகள் தொடர்பாக காங்கிரஸ் எம்பி சசி தரூரை கைது செய்வதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. குடியரசு தினத்தன்று டெல்லியில் பேரணி நடத்திய விவசாயிகளில் சிலர் செங்கோட்டையில் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர்.

 

இது தொடர்பான கருத்துக்களை காங்கிரஸ் எம்பி சசிதரூர் மற்றும் பத்திரிக்கையாளர்கள், உள்ளிட்டோர் ட்விட்டரில் பதிவிட்டனர். தவறான தகவல்களை பதிவிட்ட தாக சசிதரூர் உள்ளிட்டோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

 

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்ததோடு அதோடு சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வதற்கும் தடை செய்து உத்தரவிட்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon