--- --:--:-- --

ஆப்கானிஸ்தானுடன் நட்பை வலுப்படுத்தும் பிரதமர் மோடி..!

2

ப்கானிஸ்தானில் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர உடனடியாக சண்டை நிறுத்தம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ள பிரதமர் நரேந்திர மோடி அந்த நாட்டுடனான இந்தியாவின் நட்பை வேறு சக்திகள் தடுத்து விட முடியாது என கூறியுள்ளார்.

 

ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி உடன் காணொளி மூலம் பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் நரேந்திர மோடி ஆப்கானிஸ்தானில் அதிகரித்து வரும் வன்முறை குறித்து கவலை தெரிவித்துள்ளார்.

 

அப்பாவி பொதுமக்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் செயல்பாட்டாளர்கள் மீது பயங்கரவாதிகள் கோழைத்தனமாக தாக்குதல் நடத்துவதாக கூறிய பிரதமர் ஆப்கான் மக்களுக்கு இந்தியா எப்போதும் ஆதரவாக இருக்கும் எனக் குறிப்பிட்டு உள்ளார் .

 

இதில் பேசிய ஆப்கானிஸ்தான் அதிபர் தாலிபானில் இருக்கும் கட்சிகளும் அதற்கு ஆதரவாக இருப்பவர்களும் ஒரு அரசியல் தீர்வை ஏற்றுக் கொண்டால் அதற்கு அமைதி நிலவும் என கூறுகிறார். காணொளி மூலம் நடைபெற்ற இந்த சந்திப்பில் காபுல் நகருக்கு குடிநீர் அளிக்க இந்தியா ஒரு அணை கட்டுவதற்காக ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon