--- --:--:-- --

சிறார்களின் ஆபாச படங்களை முகநூலில் பதிவிட்ட அசாம் வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது !!!

16

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தனியார் டைல்ஸ் விற்கும் கடையில் தங்கி பணிபுரிந்து வரும் அசாம் மாநிலத்தை சேர்ந்த வாலிபர் சிறார்களின் ஆபாச படங்களை முகநூலில் பதிவிட்டது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து கோவை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது…

 

கோவை மாவட்டம் சமூக ஊடகப்பிரிவில் சமூக வலைத்தளங்களை கண்காணித்த பொழுது ரெண்டா பாசுமாடரி என்ற நபர் தனது முகநூல் பக்கத்தில் சிறார்களின் ஆபாசப்படங்களை பதிவிட்டிருந்ததாகவும்,இந்த படங்களை பொள்ளாச்சியில் இருந்து பதிவேற்றம் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

பின்னர்,இதுகுறித்து சமூக ஊடகப்பிரிவில் இருந்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் தனியார் டைல்ஸ் கடையில் தங்கி வேலை பார்த்து வந்தவரை கைது செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.மேலும்,அவன் பயன்படுத்தி வந்த செல்போனை பறிமுதல் செய்து ஆய்வு மேற்கொண்ட பொழுது சிறார்களின் ஆபாசப்படங்கள் உட்பட பல ஆபாசப்படங்களை. இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

 

விசாரணையில் தனது சொந்த ஊர் அசாம் மாநிலம் எனவும், தனது தந்தை பெயர் பெர்கோ பாசுமாடரி எனவும்,அசாம் மாநிலத்தில் இருந்து பொள்ளாச்சி வந்து தங்கி வேலை பார்த்து வந்ததாகவும் தெரிவித்துள்ளான்.மேலும்,தனக்கு ஆபாச படம் பார்க்கும் இருந்து வந்ததாகவும்,தான் பார்க்கும் படங்களை டவுன்லோடு செய்து தனது முகநூலில் பதிவிட்டதாகவும்,நண்பர்கள் சிலருக்கு தனிப்பட்ட முறையில் பேஸ்புக் மெசஞ்ரரில் அனுப்பி வைத்த தை ஒப்புக்கொண்டுள்ளான்.இதனையடுத்து அவனை கைது செய்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

மேலும்,இதுபோன்ற குழந்தைகள் தொடர்பான ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வைத்திருப்போர் மற்றும் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவோர் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருவதாகவும்,விரைவில் அவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

பொள்ளாச்சியில் தனியார் டைல்ஸ் விற்கும் கடையில் தங்கி பணிபுரிந்து வரும் அசாம் மாநிலத்தை சேர்ந்த வாலிபர் சிறார்களின் ஆபாச படங்களை முகநூலில் பதிவிட்டது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon