--- --:--:-- --

50 ஆண்டுகளுக்குப் பின் பள்ளி தோழர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

15

உள்ளாட்சி தேர்தல் தந்த மகிழ்ச்சியில் உடன் படித்த நண்பர்களோடு பகிர்ந்து கொண்டதாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை சேத்துப்பட்டில் உள்ள எம்சிசி தனியார் பள்ளியில் 1970 ஆம் ஆண்டு அப்பள்ளியில் படித்த மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது.

 

இதில் அப்பள்ளியின் முன்னாள் மாணவரான திமுக தலைவர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு தனது பள்ளிப்பருவ நண்பர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஐம்பது ஆண்டுகளுக்கு பின்னர் பள்ளி தோழர்களை சந்தித்து மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon