திருவாரூர் – காரைக்குடி தடம் மின்மயமாக்கல்
திருவாரூர் – காரைக்குடி ரயில் பாதையில் மின்மயமாக்கல் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அப்பாதையில் இயக்கப்படும் ரயில்களின் வேகத்தை உயர்த்த தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுத்து வருகிறது.இதன் ஒரு பகுதியாக, தாம்பரம் மற்றும் சென்னை எழும்பூரில் இருந்து ராமேஸ்வரத்திற்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் உட்பட மொத்தம் 8 ரயில் சேவைகள் வரும் 2027 ஜனவரி 1 முதல் அதிவிரைவு (Superfast Express) ரயில்களாக தரம் உயர்த்தப்படுகின்றன.
திருவாரூர் – காரைக்குடி தடம் மின்மயமாக்கப்பட்ட பிறகு, அதிவிரைவு ரயிலாக மாற்றப்படும் முதல் சேவை இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை எழும்பூர் – ராமேஸ்வரம்:
எழும்பூர் – ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் (16751) – 20611 (சூப்பர்ஃபாஸ்ட்)
ராமேஸ்வரம் – எழும்பூர் எக்ஸ்பிரஸ் (16752) – 20612 (சூப்பர்ஃபாஸ்ட்)
தாம்பரம் – ராமேஸ்வரம்:
தாம்பரம் – ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் (16103) – 20613 (சூப்பர்ஃபாஸ்ட்)
ராமேஸ்வரம் – தாம்பரம் எக்ஸ்பிரஸ் (16104) – 20614 (சூப்பர்ஃபாஸ்ட்)
தாம்பரம் – திருச்சிராப்பள்ளி:
தாம்பரம் – திருச்சி எக்ஸ்பிரஸ் (16807) – 22635 (சூப்பர்ஃபாஸ்ட்)
திருச்சி – தாம்பரம் எக்ஸ்பிரஸ் (16808) – 22636 (சூப்பர்ஃபாஸ்ட்)
HV40HJwa0AAEyfU
லோகமான்ய திலக் (மும்பை) – நாகர்கோவில்:
LTT – நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் (16351) – 20615 (சூப்பர்ஃபாஸ்ட்)
நாகர்கோவில் – LTT எக்ஸ்பிரஸ் (16352) – 20616 (சூப்பர்ஃபாஸ்ட் – 03.01.2027 முதல்)
பயணிகளுக்கு கிடைக்கும் நன்மைகள்:
ரயில்கள் அதிவிரைவுப் பிரிவுக்கு மாற்றப்படுவதால், பயண நேரம் கணிசமாகக் குறையும். பயணிகள் தங்கள் பயணத் திட்டங்களை அமைக்கும் போது இந்த புதிய ரயில் எண்களைக் கவனத்தில் கொள்ளுமாறு தெற்கு ரயில்வே கேட்டுக் கொண்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





