நாகையில் சோழர் கால சிலைகள் மீட்பு!
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் நாகப்பட்டினத்தில் தீவிர அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த அகழாய்வில், தமிழர்களின் பழம்பெரும் தொன்மையையும் வரலாற்றுச் சிறப்பையும் பறைசாற்றும் வகையில் பல்வேறு முக்கிய தொல்பொருட்கள் தொடர்ந்து கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, தற்போது சோழர் காலத்தைச் சேர்ந்த அரிய வெண்கல நடராஜர் சிலை மற்றும் சிவகாமி அம்மன் சிலை உள்ளிட்ட பல பழமையான சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தொல்லியல் துறை தெரிவிடைத்துள்ளது. இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் ராஜ்மோகன், “தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் நாகப்பட்டினத்தில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், தமிழர்களின் தொன்மையையும் வரலாற்றுச் சிறப்பையும் பறைசாற்றும் சான்றுகள் கிடைத்து வருகின்றன.
ஆம், சோழர் காலத்தைச் சேர்ந்த வெண்கல நடராஜர் மற்றும் சிவகாமி அம்மன் சிலைகள் உள்ளிட்ட பல சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். முதலமைச்சரின் நல்லாட்சியில், தமிழர்களின் தொன்மை, பண்பாடு மற்றும் வரலாற்றைப் பறைசாற்றும் தொல்லியல் ஆய்வுப் பணிகள் மென்மேலும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் நாகப்பட்டினத்தில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், தமிழர்களின் தொன்மையையும் வரலாற்றுச் சிறப்பையும் பறைசாற்றும் சான்றுகள் கிடைத்து வருகின்றன.நாகப்பட்டினத்தில் சோழர்களின் வரலாற்றுச் சான்றுகளாக இந்த வெண்கலச் சிலைகள் கிடைத்துள்ளது தொல்லியல் ஆய்வாளர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





