--- --:--:-- --

அதிமுக சுயபரிசோதனை செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

3

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளின் இடைத்தேர்தல் தோல்வியால் அதிமுக தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளின் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் சட்டப்பேரவையில் தவெக கூட்டணியின் பலம் 122ஆக அதிகரித்துள்ளது.

 

 

இடைத்தேர்தல் வெற்றி மூலம், தவெக எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 107-இல் இருந்து 109-ஆக அதிகரித்துள்ளது. காங்கிரஸ் 5 இடங்கள், விசிக, சிபிஐ, சிபிஎம், ஐ.யூ.எம்.எல்., ஆகிய கட்சிகள் தலா 2 தொகுதிகள் என மொத்தம் 122 எம்.எல்.ஏ.க்கள் தவெக ஆட்சிக்கு ஆதரவாக உள்ளனர். திமுக கூட்டணியில் தற்போது தேமுதிக மட்டுமே கூட்டணியில் இருப்பதால், அக்கூட்டணியின் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 60-ஆக இருக்கிறது. அதிமுக கூட்டணியின் பலம் 46ஆக உள்ளது. இதில் அதிமுக வசம் 41 இடங்களும், பாமக வசம் 4 இடங்களும் உள்ளன. பாஜகவிடம் ஒரு இடம் உள்ளது.

 

இந்த நிலையில் இடைத்தேர்தலில் தோல்வியடைந்த அதிமுக குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியிருக்கிறார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஒரு இடைத்தேர்தல் ஜனநாயக ரீதியில் நடைபெற்றது. கடந்த கால இடைத்தேர்தல் எல்லாம் இடைத்தேர்தல்களாக எடைக்கு எடை பணம், பொருள் கொடுத்து மக்களை ஆடுகள், மாடுகள் போல சந்தையில் அடைத்து வைத்து உணவை கொடுத்து வாக்களித்து வெற்றிபெற்ற கட்சிகளை எல்லாம் நாம் பார்த்தோம்.

 

 

ஆனால் இப்போது பணம் கொடுக்காமல் பிரச்சாரம் செய்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் ஜனநாயக ரீதியாக பிரச்சாரம் செய்து நடந்த இடைத்தேர்தல் இது. இதில் ஆளுங்கட்சி வெற்றிபெற்றிருக்கிறது. அதேவேளையில் இந்த இரண்டு தொகுதிகளிலும் ஐந்து மாதத்திற்கு முன் வெற்றிபெற்ற அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது.

 

 

இந்த இரண்டு வெற்றிகளும் ஆளும் கட்சிக்கு கூடுதல் பலம் சேர்க்கும். அதேவேளையில் சுதந்திர இந்தியாவில் தமிழ்நாட்டை அதிகம் முறை ஆட்சி செய்த அதிமுக இந்த தோல்விக்கு பிறகு தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். நான் அவர்களை தவறாக சொல்லவில்லை. நல்ல எண்ணத்தோடு சொல்கிறேன். ஐந்து மாதத்திற்கு முன் வெற்றிபெற்ற கட்சி இன்று மூன்றாவது இடம். அதனால் நல்ல ஆலோசனையாகத் தான் சொல்கிறேன். தவறான எண்ணத்தில் சொல்லவில்லை. அதிமுக தங்களை சுயபரிசோதனை செய்ய வேண்டும்.” எனக் கூறினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon