மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கூலித்தொழிலாளி அடித்து கொலை..!
ராசிபுரம் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கூலித்தொழிலாளியை அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பட்டினம்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளியான தமிழரசி என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த லோகநாதன் என்பவருக்கும் மது போதையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக லோகநாதன் மற்றும் அவரது உறவினர்கள் மூன்று பேர் தமிழரசனிடம் நேரில் சென்று பேசியுள்ளனர். அப்பொழுது அவர்களுக்குள் தகராறு முற்றி கைகலப்பாக மாறி உள்ளது. இதில் உள்ள லோகநாதன் மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து தமிழரசனை தாக்கியதில் அவர் படுகாயங்களுடன் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





