தங்கையை காதலித்தால் நடந்த விபரீதம்..!
ஓசூர் அருகே 14 வயது சிறுமியை கடத்திய கல்லூரி மாணவன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டான். கர்நாடக மாநில மாலு தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வரும் இளைஞர் நந்தகுமார் இவர் தங்கை முறை கொண்ட சிறுமியை காதலித்ததாக கூறப்படுகிறது.
மேலும் அந்த சிறுமியை ஓசூரில் உள்ள மாமா வீட்டிற்கு நந்தகுமார் கடத்தி சென்றதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமியை மீட்டு நந்தகுமாரை போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.





