--- --:--:-- --

பதறி ஓடிய தெரு நாய்கள்..அலறிய மக்கள்..!

7

ர்மபுரியில் வேகமாக வந்த சரக்கு லாரி நின்று கொண்டிருந்த பிக்கப் வேணும் மற்ற மூன்று இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்திற்கு உள்ளானது. தர்மபுரி மாவட்டம் அரூர் பேருந்து நிறுத்தம் அருகே ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த ஓட்டுனர் ராஜா என்பவர் ஓட்டி வந்துள்ளார்.

 

அப்பொழுது அதிவேகமாக வந்த சரக்கு லாரி கட்டுப்பாட்டு இழந்து சாலையில் நின்று கொண்டிருந்த பிக்கப் வாகனம் 3 இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்திற்கு உள்ளானது. இந்த விபத்தில் அங்கிருந்த ஒருவர் படுகாயம் அடைந்தார்.

 

மேலும் அருகில் இருந்தவர்கள் லாரி தாறுமாறாக வருவதை பார்த்து ஓட்டம் பிடித்து உயிர் தப்பினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்தவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon