கியர் வண்டி ஓட்ட தெரியாது.. ஸ்கூட்டியை திருடுவேன்..!
சென்னை தாம்பரத்தில் கியர் இல்லாத வண்டிகளை திருடி வந்த திருடனை காவலர்கள் கைது செய்தனர். சென்னை, தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் இருசக்கர வாகனம் திருட்டு அதிகம் நடைபெறுவதாக எழுந்த புகாரின் பேரில் காவலர்கள் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பொழுது பல்வேறு பகுதிகளில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் டிவிஎஸ் ஸ்கூட்டி போன்ற வாகனங்களை மட்டுமே திருடி வந்தது தெரியவந்தது.
இது குறித்து தேனாம்பேட்டை சேர்ந்த அறுபது வயதான ஹரிஹரன் என்பவரை கைது செய்த காவலர்கள் அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் தாம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பத்திற்கும் மேற்பட்ட வாகனங்களை திருடியது தெரிய வந்தது.
மேலும் தனது கியர் வண்டி ஓட்ட தெரியாததால் இவர் இல்லாத ஸ்கூட்டியை மட்டுமே திருடி வந்ததும் அம்பலமானது.





