6 வயது சிறுவன் கழுத்தறுத்து கொலை..!
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் 6 வயது சிறுவன் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தன் உறவினர் வீட்டிற்கு சென்ற சிறுவனை நீண்ட நேரமாக காணாததால் தாய் திவ்யா தேடி வந்ததாக கூறப்படுகிறது.
உறவினர் வீட்டின் முதல் மாடியில் சிறுவன் கழுத்து அறுபட்டு இறந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.






