எனது விருப்பத்திற்கு எதிரான பாதையில் என் மகன்!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (siசி) மூத்த தலைவரும், திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான கே.சுப்பராயனின் மகன் பாரதி சுப்பராயன், தனது ‘நவீன மனிதர்கள்’ அமைப்பின் நிர்வாகிகளுடன் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் இணைந்தார்.
அண்ணா அறிவாலயத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்வில் தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் உடனிருந்தனர். திமுகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பாரதி சுப்பராயன், “மாநில உரிமைகளுக்காகப் போராடும் ஒரே இயக்கம் திமுகதான். அரசியல் அனுபவமே இல்லாத ஒரு நடிகர் இன்று முதல்வராகியிருக்கிறார்.
அவருக்குக் கட்-அவுட், போஸ்டர் ஒட்டிக் கொண்டிருந்தவர்கள் இன்று அமைச்சர்களாகவும் எம்.எல்.ஏ-க்களாகவும் உள்ளனர். தற்போதைய ஆட்சியில் வெறும் பஞ்ச் டயலாக்குகள் மட்டுமே பேசப்பட்டு வருகின்றன. சரிந்து வரும் அரசியல் தரத்தை உயர்த்தும் வல்லமை திமுகவுக்கு மட்டுமே உள்ளதால் இதில் இணைந்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.
தனது மகன் தி.மு.க-வில் இணைந்தது குறித்து சமூக வலைதளத்தில் உருக்கமான அறிக்கை வெளியிட்டுள்ள கே.சுப்பராயன் எம்.பி, “எனது மகன், எனது விருப்பத்திற்கு நேர் எதிரான பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. அவரை எனது பாதையில் வென்றெடுக்க இயலாமல் போனதற்கு நான் பெரிதும் வருந்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனது அரசியல் பயணத்தைப் பற்றிக் கூறிய அவர், “நான் தேர்ந்தெடுத்த பாதை முற்றிலும் வேறானது. தனி உடைமை முறையைத் தகர்த்து, பொதுவுடைமை சமூக அமைப்பைக் கட்டுவதே என் லட்சியம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பாதையிலேயே எனது மூச்சடங்கும் வரை பயணம் தொடரும். லஞ்ச ஊழல் கூத்தாடும் இன்றைய அரசியலில், அவை என்னை ஒருபோதும் அண்டியதில்லை. என் பொதுவாழ்வு திறந்த புத்தகம்; கட்சிக்காக எதையும் இழக்கத் தயங்காதவன் நான்” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சி.பி.ஐ கட்சியைச் சேர்ந்த திருப்பூர் எம்.பி சுப்பராயன் சமூக வலைதளங்களில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: “எனது மகன், எனது விருப்பத்திற்கு நேர்எதிரான பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டது அதிர்ச்சி அளிக்கிறது. அவரை எனது பாதையில் வென்றெடுக்க இயலாது போனதற்கு நரன் பெரிதும் வருந்துகிறேன். தேர்ந்தெடுத்துக் கொண்ட பாதை முற்றிலும் வேறானது. நிகழ்கால தனி உடைமைசமூக அமைப்புமுறையைத் தகர்த்து, பொதுவுடைமை சமூக அமைப்பு முறையைக் கட்டுவதற்கான பாதையே எனது பாதையாகும்.
இந்தக்கொள்கையே இறுதியில் வெல்லும் என்ற சமூகவிஞ்ஞானத்தை உறுதிபட நம்புகிறவன் நான்!அதற்கான எனது பயணம்இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பாதையிலேதான் எனதுமூச்சடங்கும் வரைதொடரும்! எனது பொது வாழ்வில் கம்யூனிஸ்ட் நெறிமுறைக்கு மாறாக ஒருபோதும் நடந்ததில்லை.இதை ஒட்டி எழுந்த எல்லா நியாயமான விமர்சனங்களையும் பணிவோடு ஏற்கிறேன். து பொது வாழ்க்கை திறந்தபுத்தகம்! இதில்மூடுதிரைகள் ஏதும்இல்லை. கமிஷன் லஞ்ச ஊழல் கூத்தாடுகிற இன்றைய அரசியலில், அவை என்னை அண்ட அனுமதித்தததே இல்லை. எனது பொது வாழ்க்கை குறித்த விளக்கங்களை என்னிடம் எப்போது வேண்டுமானாலும் நேரில் பெறலாம். சிக்காக எதையும் இழக்கத் தயங்க மாட்டேன்! என்னை எந்த இடர்ப்பாடுகளும் நிலை குலைத்ததில்லை. நான் கம்யூனிஸ்ட் என்பதால்’ என்று கே. சுப்பராயன் எம்.பி தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





