--- --:--:-- --

ஸ்டாலினுக்கு முதலமைச்சர் விஜய் கண்டனம்!

3

தாராபுரத்தில் இடைத்தேர்தல் பரப்புரையில் தவெக வேட்பாளர் சத்தியபாமாவை உருவகேலி செய்து பேசியதாக எழுந்த சர்ச்சை தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதலமைச்சர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

 

தாராபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திமுக பரப்புரைக் கூட்டத்தில் பேசிய அக்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், தவெக வேட்பாளரை குறிப்பிட்டு அநாகரிகமாகக் கேலி செய்ததாகவும், அவர் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்படும் என்றும் அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்திருந்தார். அதன்படி, மு.க. ஸ்டாலின் மீது தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறையில் தவெக வழக்கறிஞர் அணி புகார் அளித்துள்ளது. அதில், தவெக வேட்பாளரின் உடல் தோற்றத்தைக் குறிப்பிட்டு அநாகரிகமாகக் கேலி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

 

 

இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் மற்றும் காவல் துறையினரிடம் தவெக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதலமைச்சர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் என்ற பெயரில், தீய சக்தியான தி.மு.க. சார்பில் ஓர் அவதூறு மற்றும் அநாகரிகக் கூட்டத்தை நடத்தியுள்ளார், அதன் தலைவர் மு.க.ஸ்டாலின். நமது தாராபுரம் தொகுதி வேட்பாளரான சத்தியபாமா குறித்து, உருவ கேலி செய்து, மிகவும் அநாகரிகமாகப் பேசிப் புளகாங்கிதம் அடைந்துள்ளார்.

 

தி.மு.க. சார்பாக வளர்க்கப்பட்டு வரும் ஆபாசநதியை, வன்மநதியை, வக்கிரநதியை உருவாக்கியதே முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய தான்தான் என்பதைப் பெருமையுடன் மார்தட்டி மகிழ்வுடன் ஒப்புக்கொண்டிருக்கிறார். ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். ஜனநாயகத்திற்கு விரோதமானவர்கள் தி.மு.க.வினர். ஆபாசமும் வன்மமும் வக்கிரமும் தி.மு.க.வின் மூலக்கூறிலும் மூளைக்கூறிலும் கலந்திருப்பதைத் தமிழக மக்கள் அனைவரும் காலகாலமாக உணர்ந்தே வைத்திருக்கின்றனர்.

 

பெண்களைப் பற்றி ஆபாசமாகப் பேசுவதில், அதிலும் பெண்களை அருகில் வைத்துக்கொண்டே, அவர்கள் அருவருப்பாக உணர்வதைக்கூட கண்டுகொள்ளாமல் பேசுவதில் வல்லவர்களான இந்தத் தீய சக்திக் கூட்டத்திற்குத் தமிழக மக்களும் தாராபுரம் தொகுதி மக்களும் தக்க பதிலடியைக் கொடுக்கத்தான் போகின்றனர். தொடர்ந்து பெண்களை ஆபாசமாகப் பேசி வரும் தீய சக்தி தி.மு.க.விற்குத் தமிழகப் பெண்களின் மகனாக, அண்ணனாக, தம்பியாக எனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon