என் பாவம் எல்லாம் போனது: பூனம் பாண்டே நெகிழ்ச்சி
உ.பி., கும்பமேளா சென்ற பாலிவுட் கிளாமர் நடிகை பூனம் பாண்டே, அதுபற்றி இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதில், மவுனி அமாவாசைக்கு புனித நீராடினேன். திரிவேணி சங்கமத்தில் என் பாவங்களெல்லாம் கழுவப்பட்டன என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
மேலும், நெரிசலில் பலியானவர்களுக்கு இரங்கலும் தெரிவித்துள்ளார். தன் அதீத கவர்ச்சியால், அரை நிர்வாணப் படங்களால் புயலைக் கிளப்பியவர் பூனம் பாண்டே என்பது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




