மாமியாரை கொலை செய்ய திட்டமிட்ட மருமகள்..!
திருத்தணி அருகே பூனி மாங்காடு கிராமத்தில் 60 வயதான ஜெகதாம்பாள் தனியாக வசித்து வரும் நிலையில் அவரது பெயரில் உள்ள ஒரு ஏக்கர் விவசாய நிலம் தனது பெயருக்கு எழுதி தருமாறு மருமகள் ஜான்சி ராணி கேட்டதாகவும் அதற்கு அவர் மறுத்து பதிலளித்ததாகவும் கூறப்படுகிறது.
அந்த ஆத்திரத்தில் உடல்நிலை சரியாமல் இருந்த ஜகதாம்பாலை மருத்துவமனை அழைத்து செல்லாமல் இருந்த ஜான்சி ராணி மாமியாரை கொலை செய்தாவது நிலத்தை அபகரிக்க முடிவு செய்து தனது சொந்த ஊரான கள்ளக்குறிச்சியில் இருந்து சீனிவாசன் என்பவரை வரவழைத்துள்ளார்.
உறவினர் என்று கூறிய ஜகதாம்பாளுக்கு உதவிகள் செய்து வந்ததும் சீனிவாசனை பழக விட்டுள்ளார். நேற்று யாருமில்லாத நேரத்தில் சீனிவாசன் ஜெகதாம்பாளின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயலவே அவர் கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தினர் சென்று காப்பாற்றியுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





