யானை தாக்கி ஒருவர் காயம்.. வனத்துறை எச்சரிக்கை..!
தென்காசி மாவட்டம் பனங்குடி அருகே யானை தாக்கியதில் ஒருவர் காயமடைந்தார். யானையை வனத்திற்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.
தென்காசி மாவட்டம் பண்பொழி அருகே உள்ள கரிசல் குடியிருப்பு என்ற பகுதியில் காலை குடியிருப்பில் நுழைந்த யானை அந்த பகுதியில் சுற்றி வருவதன் காரணமாக அந்த பகுதியில் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இன்று காலை முதலே யானை தொடர்ந்து தோட்டத்திற்குள்ளும் அருகே உள்ள குளத்திற்கும் மாறி மாறி சென்று வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





