ஜெ.பி நட்டா பங்கேற்கும் பேரணிக்கு அனுமதி மறுப்பு..!
பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா திருச்சியில் பேரணி நடத்த காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், திட்டமிட்டபடி பேரணி நடக்கும் என அக்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தல் பரப்புரைக்காக தனி விமானம் மூலம் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா நேற்று இரவு திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார்.
இன்று காலை 10 மணிக்கு சிதம்பரம் தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்தியாயினிக்கு ஆதரவாக அரியலூரில் பரப்புரை மேற்கொள்ளும் ஜெ.பி.நட்டா, பின்னர், நண்பகல் 12 மணிக்கு கரூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பாஜக வேட்பாளர் செந்தில்நாதனுக்கு வாக்கு சேகரிக்கவுள்ளார்.
இதையடுத்து, மாலை 4 மணிக்கு விருதுநகர் தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலத்தில் நடைபெறும் கூட்டத்தில் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாரை ஆதரித்து பேசவுள்ளார்.
அதன் பிறகு, மாலை 5.30 மணிக்கு திருச்சி தொகுதி பாஜக வேட்பாளர் செந்தில்நாதனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கவுள்ள ஜெ.பி.நட்டா, திருச்சி காந்தி மார்க்கெட் முதல் மலைக்கோட்டை வரை நடைபெறும் வாகன பேரணியிலும் பங்கேற்க திட்டமிட்டுள்ளார்.
ஆனால், சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா நடைபெற இருப்பதால், அப்பகுதியில் வாகனப் பேரணி நடத்தக்கூடாது என காவல் துறை அனுமதி மறுத்துள்ளது. எனினும், தடையை மீறி பேரணி நடத்தப்படும் என பாஜகவின் திருச்சி மாவட்ட தலைவர் தெரிவித்துள்ளார்.இதனிடையே, பிரதமர் மோடி வரும் 13-ஆம் தேதி மீண்டும் தமிழ்நாட்டுக்கு பரப்புரைக்காக வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




